ராமநாதபுரம்: கடலாடி அருகேவுள்ள காவாகுளம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார்.
கிராம சபைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த மதுப்பிரியர் ஒருவர், ’ஒரு குவார்ட்டர் விலை 200 ரூபாய்க்கு அநியாயமாக விற்கப்படுவதாக’ அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.
இதனைக் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் அவரைக் கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..அதிர்ச்சியடைந்த இசைப்புயல்!