ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் தெற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுக கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அக்கட்சியின் மாநில பொருளாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த முனியசாமியும் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கமுதி பகுதிகளில் பரப்புரை செய்தார்.
மேலும், அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பசும்பொன், பாக்குவெட்டி, கருங்குளம், செங்கப்படை, புதுக்கோட்டை, கோவிலாங்குளம், கொம்பூதி, அரியமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன்பிரபாகர், அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.