ETV Bharat / state

வெளிநாடு செல்வோருக்கான கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி - Corona Vaccine

ராமநாதபுரம்: வெளிநாடு செல்வோர் ஏதுவாக கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் தவணை ராமநாதபுரத்தில் இரண்டு இடத்தில் செலுத்தப்படுகிறது.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி ராமநாதபுரத்தில் போடப்படுகிறது

author img

By

Published : Jun 20, 2021, 7:15 PM IST

கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை கருத்தில்கொண்டு கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டபின், இரண்டாவது டோஸை 84 நாள்களுக்குப்பின் செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் கல்வி, வேலை, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி போன்ற காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் பயணிகளின் நலன் கருதி, கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 28 நாள்களுக்குப் பின் செலுத்திக்கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள்

இந்தப் பிரிவில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கெடுக்க வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கு அரசு மருத்துவமனையில் சுந்தர்ராஜன் என்பவரை 63850 83361 என்ற எண்ணிலும், பரமக்குடி அரசு மருத்துவமனையில ராஜதுரை என்பவரை 9489483076 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தடுப்பூசி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.