ETV Bharat / state

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது! - modi

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக மாநில மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

9 tamilnadu fishermen arrested by srilankan navy
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
author img

By

Published : Jul 25, 2023, 11:49 AM IST

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக மாநில மீன்வளத்துறை அதிகாரி இன்று (ஜூலை 25) தெரிவித்தார். இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று (ஜூலை 24) காலை மீன்பிடிக்கச் சென்றதாகவும், நேற்று இரவு கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. அவர்கள் கைது செய்வதும், அதன்பின் தமிழ்நாட்டில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி மீட்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ராமேஸ்வரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள், கடலூரைச் சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 22 பேர் கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை கைது செய்தனர். பின்னர், படகுகளுடன் மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசினார்கள். இந்த நிலையில், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

பின்னர், மீனவர்கள் 22 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த 22 மீனவர்களுக்கும் அவசர காலச் சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, இலங்கை அதிபர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்.

அப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று எங்களது சந்திப்பில், இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக பேசினோம். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். அதில், மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை பரஸ்பரமாக ஒப்புக் கொண்டோம்.

இரு நாடுகளின் பாதுகாப்பு நலன்களும், வளர்ச்சியும் பின்னிப் பிணைந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். யுபிஐ பேமெண்ட் முறையை இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இருநாடுகள் இடையே நிதிசார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ரூ.7 லட்சம் கோடிக்கும் மேலான பொதுக்கடனில் தமிழ்நாடு - மத்திய அரசின் தரவுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.