ராமநாதபுரம்: மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூரிலிருந்து சாயல்குடி நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது கன்னிகாபுரி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது. இதனால் திடீரென அரசு பேருந்து நிலை தடுமாறி அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து ஓட்டுநர் இராமர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பெர்ட்டின் என்பவர் உட்பட பேருந்தில் பயணம் செய்த எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாயல்குடி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குல்காமில் தொடங்கியது துப்பாக்கிச்சூடு