தொண்டி துறைமுகம் அருகே இன்று காலை பெண் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் அந்த டால்பினை தொண்டி கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடற்கூறாய்வு செய்து கடற்கரை அருகே புதைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "அந்த டால்பின் பாக்கு நீரிணை பகுதியைச் சேர்ந்த மீனாகும். 20 வயதான இந்த பெண் டால்பின் எட்டு அடி நீளமும் ஐந்து அடி அகலமும் சுமார் 500 கிலோ எடையும் கொண்டது.
கடந்த 10 நாட்களாக கடல் பரப்பில் வீசிவரும் சூறைக் காற்றினால் வழி தவறி கப்பலின் மீது மோதி காயம் அடைந்து பின் மாய்த்திருக்கும். இந்த டால்பின் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும்" என்றார்.