ராமநாதபுரம்: நாட்டின் 75ஆவது சுதந்திர தினமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலுள்ள முக்கிய இடங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக காவல் துறையினர் பாம்பன் ரயில் பாலத்தின் மேல்பகுதி, கீழ்ப்பகுதி பக்கவாட்டு சுவர் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் மருத்துவம், குடும்ப நலத்துறைக்கான நிதிஒதுக்கீடு!