ETV Bharat / state

கோயம்பேட்டிலிருந்து திரும்பிய 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - மாவட்ட ஆட்சியர் தகவல் - ராமநாதபுரம் கோவிட்-19

ராமநாதபுரம் : கோயம்பேடு சந்தையிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய ஏழு தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

rmd
rmd
author img

By

Published : May 5, 2020, 9:26 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், வண்டிக்காரன் தெருவில் உள்ள கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், நடமாடும் கரோனா பரிசோதனை ஊர்தியைத் தொடங்கி வைத்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "ராமநாதபுரத்தில் இதுவரை 2,566 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், 2,545 பேருக்குப் பாதிப்பு இல்லை. ஒருவரின் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறோம்.

இதுவரை 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் கரோனா முடிவுகளை விரைவாக அறியலாம்.

கோயம்பேடு சந்தையிலிருந்து ராமநாதபுரம் திரும்பியுள்ள ஏழு பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்” என்றார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பணி செய்துவிட்டு வெவ்வேறு ஊர் திரும்பிய ஏராளமான தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள சூழலில், நோய்ப் பரவலைத் தடுக்க கோயம்பேடு சந்தைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.