ETV Bharat / state

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்! - இலங்கைத் தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.45 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கைத் தங்கம் பறிமுதல்
author img

By

Published : Sep 23, 2019, 7:43 AM IST

இலங்கையில் இருந்து தங்கம், வாசனை பொருட்கள் உள்ளிட்டவை இரவு நேரங்களில் படகுகள் மூலம் தமிநாட்டிற்கு கடத்தப்படுவதும் தமிழ்நாட்டில் இருந்து மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி தூத்துக்குடி மத்திய வருவாய்த் துறை அலுவலர்கள் கடலோரப் பகுதிகளை கண்காணித்து வந்தனர்.

இலங்கைத் தங்கம் படகு மூலம் கடத்திவரப்பட்டது
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம்

இந்நிலையில், இலங்கையிலிருந்து படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடல் பகுதிக்கு கடத்தி வரப்பட்டது, பின்பு அங்கிருந்து காரில் எடுத்துச் சென்ற ரூ.2.45 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை, வருவாய் புலனாய்வு அலுவலர்கள் மதுரை - ராமேஸ்வரம் சாலையில் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் சென்ற 7 பேரை காவல் துறையினர் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ. 30 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல்... 2 பேர் கைது!

Intro:இராமநாதபுரம்
செப்.22

மண்டபம் அருகே இலங்கை தங்கம் 7.5 கிலோ பறிமுதல்
சிக்கியது, 7 பேரிடம் தீவிர விசாரணை.Body:இலங்கையில் இருந்து கடத்தி வந்த 7.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இலங்கையில் தங்கம் மற்றும் வாசனை பொருட்கள் மர்மப்படகுகளில் தமிழகத்திற்கு இரவு வேளைகளில் கடத்தி வரப்படுகிறது. இது போல் தமிழகத்தில் இருந்து மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படுகிறது. தகவல் மற்றும் ரகசிய கண்காணிப்பு படி கடத்தல் தங்கம் பிடிபடுகிறது. போதை பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2014 முதல் 2018 வரை 35 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 20க்கும் மேற்பட்டோர் மத்திய வருவாய் புலனாய்வு, கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக இலங்கை தங்கம் தடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது . இதன்படி தூத்துக்குடி மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கடலோரப் பகுதிகளை கண்காணித்தனர். இலங்கையில் இருந்து மர்மப்படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடல் பகுதிக்கு கடத்தி வந்து காரில் எடுத்துச் சென்ற ரூ.2.45 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மதுரை - ராமேஸ்வரம் சாலையில் நேற்று மதியம் பறிமுதல் செய்தனர். காரில் சென்ற மதுரை கே.கே.நகர், சென்னை புதுப்பேட்டை சேர்ந்த இருவர் உள்பட 7 பேரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்தில்
தங்கம் விலை
பவுன் ரூ.30 ஆயிரத்தை எட்டிய நிலையில் தங்கம் கடத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.