பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவை ஆளுநருக்கு அனுப்புவதற்கு முன்பே, இந்த அரசாணையை முதலமைச்சர் கொண்டு வந்திருந்தால் இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டிருக்காது. அரசு நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று.
ஆளுநரிடம் உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல், திமுகவின் தொடர் போராட்டங்களுக்குப் பின்னர், அரசு இதனை செய்துள்ளது. எனினும் இந்த அரசாணையை நேற்றே நான் வரவேற்றுள்ளேன். அரசாணை குறித்து இருவேறு கருத்துகள் பேசப்படுகின்றன. எனவே எந்த சட்ட சிக்கலும் ஏற்படாத வகையில், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, கலந்தாய்வு தேதியை உடனே அறிவிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ஆளுநர் தாமதத்தால் 7.5% இடஒதுக்கீடு அரசாணை! - முதலமைச்சர் விளக்கம்