ராமநாதபுரம் : சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு நாள் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதி பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பாக முன்னாள் ஆதிதிராவிட அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.எல் ஏ முத்தையா ஆகியோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்வர்ராஜா, ” அதிமுக அரசு இந்த சமுதாய மக்களுக்கு துணையாக இருந்து வந்துள்ளது. இனியும் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதற்கு முந்தைய ஆட்சியில் அரசிடம் எடுத்து கூறினோம். அதை பரிசீலனையில் வைத்திருந்தோம்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டுவது தொடர்பாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க : இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் - விரைவில் நல்ல முடிவு?