ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்துவது தொடர் கதையாகியுள்ளது. இதைத் தடுக்கும்விதமாக இந்திய கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தங்கச்சிமடம் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு மருந்து பொருள்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடலோர காவல் படையினரைக் கண்டதும், கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
பின்னர் கல்லத்தோணியில் கடத்த முயன்ற சுமார் 6 ஆயிரம் மருந்து குப்பிகளை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடும் முயற்சியில் கடலோர காவல்படை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப்பட்ட டெண்டரில் ரூ.300 கோடி மோசடி!