கமுதியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இடைச்சியூரணி அருகே கஞ்சா வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் தேனியிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அந்தச் சரக்கு வாகனத்தில் ஏழு நபர்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தது காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில் காவல்துறையினர் முத்துப்பட்டியை சேர்ந்த முத்து தமிழ்ச்செல்வம் தாதாகுளம் கிராமத்தை சேர்ந்த மொழிச் செல்வம், காணிக்கூரைச் சேர்ந்த மணிகண்டன் அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்து இருளாண்டி மதுரையை சேர்ந்த மணிக்குமார், சுபாஷ்மாயகிருஷ்ணன், சுபாஷ் ராமர் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 வாள்கள், 26 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பொன்னேரி அருகே கஞ்சா பறிமுதல்