சாயல்குடி அருகே மின்சாரம் தாக்கி 50 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு - இராமநாதபுரம் சாயல்குடி அருகே மின்சாரம் தாக்கி 50 செம்மறி ஆடுகள் பலி
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே மின்சாரம் தாக்கியதில் 50 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் என்பவர், தனக்கு சொந்தமான 250 செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, மீண்டும் தனது கிராமத்தின் அருகேயுள்ள வயல்வெளியில், கூடாரம் அமைத்து, இரவு நேரத்தில் ஆடுகளை அடைத்துள்ளார். பின்னர் ஆட்டின் கூடாரம் அமைக்கப்பட்டிருந்த இடத்தின், மேல் பகுதியில் உயரழுத்த மின்கம்பி சென்றுள்ளது.
இரவு நேரத்தில் உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக, மின் கம்பி கூடாரத்தின் மேல் அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக 50 ஆடுகள் பலியாயின. மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற மின்சார வாரியம் மற்றும் காவல்துறையினர், இதுகுற்த்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்து புதைத்தனர். இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் பாய்ந்து தாய், மகன் இருவர் உயிரிழப்பு!