ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு (ஜீன். 2) தமிழ்நாடு அரசு வழங்கிய 4,000 கோவிட்ஷீல்ட் தடுப்பூசிகளும் 500 கோவாக்சின் தடுப்பூசிகளும் ராமநாதபுரம் வந்தடைந்தது. இந்தத் தடுப்பூசிகள் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி தெரிவித்தார்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசி மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 250 கோவிட்ஷீல்ட் தடுப்பூசிகளும் 20 கோவாக்சின் தடுப்பூசிகளும் உள்ளன.
![ராமநாதபுரத்திற்கு வந்த கரோனா தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:55:31:1622712331_tn-rmd-02-4500-thousand-vaccine-arrived-to-ramanathapuram_03062021145118_0306f_1622712078_643.jpg)
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி மருத்துவமனை்யில் தடுப்பூசி இல்லை. எனவே தடுப்பூசியை விரைந்து அனுப்புமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.