ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் கரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்ட பகுதியில் எடுக்கப்பட்டு வரும் கிருமி நாசினி, தூய்மைப்படுத்தும் பணி போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 799 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 30 பேருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 164 பேருக்கு கரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 205 பேரின் முடிவுகள் வர வேண்டியிருக்கிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த இடங்களில் 19 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு கட்டுப்பாட்டுகள் அமைக்கப்பட்டு கரோனா மேலும் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 30 பேரில் 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 14 பேருக்கு தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
நோயாளிகள் வசித்த பகுதிகளைச் சுற்றியுள்ள 44 ஆயிரத்து 673 வீடுகள் தொடர்ந்து சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தேவையின்றி சுற்றித் திரிந்த 3 ஆயிரத்து 633 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: