கரோனா வைரஸ் பாதி்ப்பு காரணமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை16) புதிதாக 29 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின், எண்ணிக்கை 2,167ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்த நிலையில் கரோனா உயிரிழப்பு 52ஆக அதிகரித்துள்ளது.