ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாகப் புரெவி புயல் நிலைகொண்டிருப்பதால் தொடர் மழை பெய்துவருகிறது. புயலானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக இருந்து காற்றழுத்த தாழ்வாக வலுவிழந்து உள்ளது.
இதன் காரணமாக நேற்று (டிச. 04) முழுவதும் ராமேஸ்வரம் தீவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து உள்ளன. அதனைச் சரிசெய்யும் பணியில் அரசு, மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் வனத் துறையினருக்குச் சொந்தமான குருசடை தீவு, புரெவி புயலின் தாக்கத்தால் பயணிகள் படகு நீரில் மூழ்கியது, ஓங்கி சின்னம் இடிந்து விழுந்தது, 10-க்கும் மேற்பட்ட பூவரச மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஐந்து மீட்டர் அளவிற்கு மண் அரிப்பு எனச் சுமார் 20 லட்சம் வரை சேதம் ஏற்பட்டு உள்ளது. அதனை வனத் துறையினர் மண்படம் வனச்சரகர் வெங்கடேஷன் தலைமையிலான குழுவினர் சீர்செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: இரும்பு பெண்மணியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...!