ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி (தனி) என 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை (மார்ச்.12) திருவாடானை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததார்.
நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சி 4 சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அமமுக சார்பில் மாற்று வேட்பாளர் உள்பட 3 மனு முறையே 11 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை 4 தொகுதிகளில் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ரேஸ் கோர்ஸில் நடைப்பயிற்சி: கோவையில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த கமல்!