ETV Bharat / state

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..! - தமிழக மீனவர்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 தமிழக மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்தனர்.

Breaking News
author img

By

Published : Mar 24, 2019, 3:53 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை விரட்டியடித்தனர்.

அதோடு மட்டுமில்லாமல், அவர்கள் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 11 மீனவர்களைச் சிறைபிடித்தனர். இலங்கைக் கடற்படையின் இத்தகைய கைது நடவடிக்கை, மீனவர்கள் மத்தியில் பெரிய அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Intro:ராமநாதபுரம்
மார்ச் 24
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்கள் மற்றும் இரண்டு விசை படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

Body:இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை விரட்டித்தனர். அடித்ததோடு அவர்கள் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

மேலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக
ஜோசுவா கோபிராஜ்

செல்வம் முருகன் பிரசிடன் நாகராஜன் சூரியன் ராஜ் மற்றும்

திருமுருகன் படகில் சென்ற இருளப்பன் பால்ராஜ் பூமிநாதன் ஆகிய 11 மீனவர்களை யும் இரண்டு விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர்.
இலங்கை கடற்படையின் இத்தகைய கைது நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் பெரிய அச்சத்தையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.