ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை பகுதியில் கடத்தல் பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு கடத்தவிருப்பதாக மரைன் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மரைன் சார்பு ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் வேதாளை கடற்கரைப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதில், சமத்துவபுரம் அருகே 51 மூட்டைகளிலிருந்த ஆயிரம் கிலோ கடத்தல் பீடியிலைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்நது. பின்னர், காவல் துறையினர் பீடியிலை மூட்டைகளைக் கைப்பற்றி அதனைக் கடத்த முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளத்துக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்