ETV Bharat / state

ஓயாத சாதிக் கொடூரங்கள் - பட்டியலின இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்து கொடுமை!

புதுக்கோட்டை: பட்டியலின சாதி எனக்கூறி இரவு முழுவதும் அடித்து, வாயில் சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் புகாரளித்துள்ளார்.

Youth complaint of caste harassment  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்  Pudukkottai district Avudaiyarkoil  சாதி கொடுமைகள்  Caste atrocities  புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்  Pudukkottai District Latest News  பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்  Attack on the dalit youngster
Youth complaint of caste harassment
author img

By

Published : Jan 28, 2021, 2:47 PM IST

Updated : Jan 28, 2021, 8:15 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா உள்பட்ட குணத்திரான்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்-லதா தம்பதி. இவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் மதன்(19) பட்டயப் படிப்பு படித்துவிட்டு டிரைவராக கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பொங்கல் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை நாள்கள் என்பதால் கடந்த 24ஆம் தேதி குணத்திரான்பட்டி அருகே உள்ள பட்டமங்கலம் எனும் பகுதியில் இருக்கும் கண்மாயில் மீன் பிடிக்க வலை போடுவதற்காக இரவில் 7 மணியளவில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். மதன் உடன் சென்ற நால்வரில் இருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

கண்மாயில் வலை வீசிவிட்டு சாலை ஓரத்தில் உணவு உட்கொண்டு இருக்கும் பொழுது அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி, பிரதீப், மெய்யநாதன், மற்றுமொருவர் வந்து "என்னடா (அவர்களின் சாதி பெயரைக் கூறி) நாங்களே டூவீலரில் தான் போறோம் வரோம், ஆனா நீங்க கீழ் சாதி பயலுங்க, டூ-வீலர், கார்-லாம் வச்சு சீன் போடுறீங்களா? உங்களை யாருடா இங்க மீன்பிடிக்க வர சொன்னது எந்திரிங்க என தகாத வார்த்தைகளில் பேசத் தொடங்கியுள்ளனர்.

அதற்கு மதன் இப்படியெல்லாம் பேசாதிங்க அண்ணா என்று கூறியுள்ளார். என்னையே எதிர்த்து பேசுறியா என அசிங்கமான வார்த்தைகள் கூறி அடித்து துன்புறுத்தியுள்ளனர். மதனுடன் வந்த நண்பர்கள் உயிருக்கு பயந்து ஓடிவிட்டனர். பிறகு மதன் அவர்களிடமிருந்து தப்பித்து ஆவுடையார் கோயில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று கீழே விழுந்து விட்டதாக கூறி காயங்களுக்கு முதலுதவி எடுத்துள்ளார்.

அதன்பின், அமரடக்கி பகுதியிலுள்ள மருந்தகத்தில் மாத்திரை போடுவதற்காக தண்ணீர் வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது இரவு சுமார் 11.30 மணியளவில், மூர்த்தி, பிரதீப், மெய்யநாதன் மற்றுமொருவர் காரில் வந்து மதனை அடித்து இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர், அமரடக்கியில் உள்ள கோயில் அருகே இருக்கும் கண்மாய் பகுதியில் வைத்து இரவு முழுவதும் மதனின் தலையில் ஏறி மிதித்து, நெஞ்சில் நீ ஏறி நின்று, கை கால்களை முறுக்கி, அடித்து மனிதத்தன்மை இல்லாமல் துன்புறுத்தியுள்ளனர். நெஞ்சு வலி தாங்க முடியாமல் அவர்களிடம் தண்ணீர்.. தண்ணீர் கொடுங்க என மதன் கேட்டபோது, கீழ் சாதி பயலுக்கு நாங்க தண்ணி கொடுக்கணுமா என்றுகூறி நால்வரும் இணைந்து அவரின் வாயில் சிறுநீர் கழித்து அடித்துள்ளனர்.

குறிப்பாக மது அருந்திக் கொண்டே நால்வரும் மதனை சாதி பெயரை சொல்லி திட்டி, விடிய விடிய அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். காலை 6 மணியளவில் போதையில் அவர்கள் இருந்தபொழுது அவர்களுக்கு தெரியாமல் சுடுகாட்டுப் பகுதி வழியாக மயக்க நிலையில் தப்பித்து அவரது சித்தப்பா வினோத் வீட்டிற்கு சென்று அங்கு நடந்ததைக் கூறியுள்ளார். பின் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்டு இன்று வரை சிகிச்சையில் உள்ளார்.

இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்த பொழுது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். மேலும் மதனிடம் விசாரித்தபோது ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். நீண்ட அழுத்தத்திற்கு பிறகு இன்று(ஜன.28) அறந்தாங்கி டிஎஸ்பி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதுபோன்ற சாதி வெறி சம்பவங்கள் இனிமேலும் அரங்கேற கூடாது. எங்களைப் போன்ற பட்டியின மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்தக் கொடூரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதனும், அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சாதி பெயரைக் கூறி கொடுமைப்படுத்திய கணவர் கைது!

Last Updated : Jan 28, 2021, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.