புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பூவைமாநகரைச் சேர்ந்தவர் ராமநாதன்(36). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் வேலை நிமித்தமாக நீலகிரி மாவட்டம், குன்னூரில் வசித்து வருகிறார். ராமநாதன் தனது சொந்த ஊரான பூவைமாநகருக்கு அடிக்கடி வந்து சென்றபோது அவரது அண்ணன் மகளுடன் நெருக்கம் ஏற்பட்டு பின் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் ராமநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, ராமநாதன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363 கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தைத் திருமணச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:தங்கையை பாலியல் வல்லுறவு செய்த அண்ணண்கள் - போக்சோ சட்டத்தில் கைது!