கரோன தொற்றானது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் 1200 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவமனையிலேயே உணவு மற்றும் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
அதேபோல் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் உடல் சோர்வை போக்கும் விதத்தில் அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் நோயாளிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும், தற்போது தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறோம் என்ற எண்ணம் ஏற்படாமல் இருப்பதற்கும் இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு நேரம் நிர்ணயிக்கப்பட்டு நோயாளிக்கு யோகா பயிற்சி நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா வார்டில் படுக நடனம் - நோயாளிகள் உற்சாகம்