புதுக்கோட்டை: புதிய தொழில் முனைவோர் மட்டுமல்லாது, பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் புதிதாக திறக்கப்பட்ட ராஜலட்சுமி அசைவ உணவகத்தில், இன்றைய தினம் திறப்பு விழாவை முன்னிட்டு முந்தைய நாணயங்களை நினைவுபடுத்தும் விதமாகவும், இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதமாகவும், 5 பைசா முதல் 20 பைசா வரையிலும் உள்ள பழைய நாணயங்கள் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை வழங்கினர்.
மேலும், அசைவ உணவு திறப்பு விழா சலுகையால் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை வாங்கிச் சென்றனர். இச்செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:எம்ஜிஆர் இடைத்தேர்தலில் வென்றது போல; ஈரோட்டிலும் அதிமுக வெல்லும்: சாவித்திரி கோபால்