ETV Bharat / state

நடுரோட்டில் இறந்தவர் உடலை வைத்து கிராம மக்கள் திடீர் போராட்டம்! - puthukottai news

புதுக்கோட்டை அருகே நடுரோட்டில் இறந்தவரின் உடலை வைத்து, கிராம மக்கள் போரட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம்!

author img

By

Published : May 23, 2021, 10:40 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள வீரமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மெய்யர் (75). வயது முதிர்வு காரணமாக, இவர் நேற்று முன்தினம் (மே.21) காலமானார்.

இதையடுத்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக, வீரமங்கலம் கிராமம் வழியாக எடுத்து சென்றனர். அப்போது, கிராமத்திற்குள் உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று வீரமங்கலம் பகுதி மக்கள் வழிமறித்தனர்.

இதில் ஆத்திரமடைந்த காமராஜ்நகர் பகுதி மக்கள், நடுரோட்டில் உடலை இறக்கி வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜ் நகரிலிருந்து, வீரமங்கலம் கிராமத்துக்குள் செல்லாமல் ஆற்று பகுதியில் உள்ள மயானத்திற்குச் செல்ல, வேறு வழியில் சடலத்தை முன்பு கொண்டு சென்று வந்தனர்.

அண்மைக்காலமாக, இந்த வழியாக கொண்டு செல்கின்றனர் என, வீரமங்கலம் கிராம மக்கள் தெரிவித்தனர். அதற்கு காமராஜ் நகர மக்கள், இந்த சாலை அனைவருக்கும் பொதுவான சாலை தானே, இந்த வழியாக உடலைக் கொண்டு சென்றால் என்ன என்று கேட்டனர்.

இதன் காரணமாக, இரண்டு தரப்பினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதோடு, கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் புதுக்கோட்டை மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆனந்த் மோகன், அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், மெய்யரின் உடல் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.

இதையும் படிங்க: காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.