விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் சங்கத்தமிழன். விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட பிரச்னை நீங்கி பல சங்கடங்களை கடந்து திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விஜய் சேதுபதி நடித்துள்ள மண்டிஆப் விளம்பரத்தினை தடை செய்யக் கோரி வர்த்தக சங்கத்தினர் சங்கத்தமிழன் திரையிடபட்டுள்ள திரையரங்கு முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், விஜய் சேதுபதி நடித்துள்ள 'மண்டி ஆப்' விளம்பரத்தினை தடை செய்ய வேண்டும். மேலும் திரைப்பட நடிகர்கள் இதுபோன்ற சிறு வணிகர்கள் பாதிக்கக்கூடிய ஆன்லைன் விளம்பரங்களில் நடிக்கக் கூடாது.
ஆன்லைன் வர்த்தகத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அப்போதுதான் எங்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். மக்களை ஊக்குவிக்க வேண்டிய நடிகர்கள் இதுபோன்ற விளம்பரத்தில் நடிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார்.