புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளராக பணியாற்றி வருபவர் பாரதிதாசன். இவர் பத்திரப் பதிவுக்காக வருவர்களிடம் ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கறம்பக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் இரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில், பாரதிதாசனிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், கணக்கில் வராத 21 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சார்பதிவாளர் பாரதிதாசனின் மீது வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.