புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் எடைத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா(22). மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மருதன் மகன் அருள்(16)
ஆகிய இருவரும் இருச்சக்கர வாகனத்தில் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசலை நோக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது, எதிரே அன்னவாசலில் இருந்து செக்கநாதன்பட்டிக்கு சென்றுகொண்டிருந்த மண்வேளாம்பட்டியை சேர்ந்த கார்த்தி(25), பொன்னுச்சாமி(25), மணிராஜ்(18) ஆகிய மூவரும் ஒரே இருச்சக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் கைது
இந்த இரண்டு வாகனங்களும், சித்தன்னவாசலை அடுத்த சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு இருச்சக்கர வாகனங்களில் பயணித்த ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இவ்விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள நான்கு பேரும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவலர்கள் ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.