ETV Bharat / state

டிக் டாக் மோகம்: முறைவாசல் செய்த காவல்துறையினர்! - டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்

புதுக்கோட்டை: டிக் டாக்கில் காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

sempati
sempati
author img

By

Published : Jun 13, 2020, 4:28 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரை கிண்டலடிப்பதுபோன்று வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி காவல் நிலையத்திலிருந்து வரும் இளைஞர் ஒருவர், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வருவது போல் வெளியே வருகிறார். அதில், செய்முறை செய்வது மாதிரி தோரணையாக சிறைக்கு சென்று வருவார்.

வைரலான டிக் டாக் வீடியோ

சுதந்திர போராட்ட தியாகியோடு ஒப்பிட்டு வசனங்களுடன் இடம்பெறும் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், டிக் டாக் வீடியோ காவல்துறையின் பார்வைக்கு சென்றது. இதனையடுத்து, அந்த டிக் டாக் வீடியோவை வெளியிட்ட, நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெற்றி, மகேந்திரன் ஆகிய இருவரையும் செம்பட்டி விடுதி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உலகத்திலேயே கேவலமாக ஊரடங்கை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசுதான் - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.