ETV Bharat / state

''தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்'' - சிவன் கோயில் கட்டி, அதில் தந்தைக்கு சிலை வைத்த மகன்கள் - புதுக்கோட்டையில் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இரண்டு சகோதரர்கள் இணைந்து, மறைந்த தங்களது தந்தைக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Appa statue
புதுக்கோட்டை
author img

By

Published : Apr 5, 2023, 7:03 PM IST

தந்தைக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கானப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற ஐஜி பெரியய்யா. இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர்.‌ இவர்களது தந்தை நல்ல குருந்தப்பன் சுவாமி குரு (90). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவர், தீவிர சிவன் பக்தனாகவும், தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உள்ள நபர்களுக்கு குருவாகவும் திகழ்ந்துள்ளார். இவர் ஓலைச்சுவடிகள் படித்து, பலருக்கும் வாக்கு சொல்லி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தந்தை மீது கொண்ட பாசத்தால் அவரது மகன்களான ஓய்வுபெற்ற ஐஜி பெரியய்யா‌ மற்றும் அவரது சகோதரரான நியூயார்க்கில் உள்ள ராஜன் குருந்தப்பன் ஆகியோர் இணைந்து, அவர்களது சொந்த ஊரான கானப்பேட்டை கிராமத்தில், இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் 'ANK.சுவாமி குரு கோயில்' என தங்களது தந்தை பெயரில் சிவாலயம் ஒன்றைக் கட்டியுள்ளனர். இக்கோயிலில் கருவறையில் சிவன் சிலையையும், கருவறைக்கு வெளியே தங்களது தந்தையான நல்ல குருந்தப்பன்‌சுவாமி‌ குருவின் சிலையையும் நிறுவி உள்ளனர்.

இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று(ஏப்.5) விமரிசையாக நடைபெற்றது. கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, பின்னர் பல்வேறு புனித தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மங்கள இசை முழங்க கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலின் ராஜகோபுர கலசத்தின் மேல் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மகன்கள் தங்களது தந்தைக்காக கோயில் கட்டி வழிபடுவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பாபிஷேக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐஜி பெரியய்யா மற்றும் அவரது சகோதரர் கூறுகையில், "எங்களது தந்தை தீவிர சிவ பக்தர். அவர் பலருக்கும் ஓலைச்சுவடிகளை வாசித்து நல்ல வாக்குகளை சொல்லி பலரும் நன்றாக உள்ளனர். அவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், அவருக்கு கோயில் கட்டத் திட்டமிட்டோம். கடந்த ஏழு ஆண்டு காலமாக, எங்களது சொந்த நிலத்தில் கோயில் கட்டி, அவருக்கு சிலை அமைத்து, அவர் சிவன் பக்தன் என்பதால் கருவறையில் சிவன் சிலையையும் நிறுவி இன்று கும்பாபிஷேகம் செய்துள்ளோம். இந்த கும்பாபிஷேகத்தில் பலரும் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர்.

இதோடு மட்டுமல்லாமல் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அனைவருக்கும் பசியின்றி உணவு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்பகுதியில் உணவுக் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபம், மாணவர்களுக்கு படிப்பு வழங்குவது, மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து சேவையாக ஒரு அறக்கட்டளை போல் நிறுவி செய்ய உள்ளோம். பெற்றோரை அனைவரும் மதிக்க வேண்டும். தந்தை சொல் தான் மந்திரம் என்று கூறுவார்கள், அப்படிப்பட்ட தந்தையின் சொல்லைக் கேட்டு அனைவரும் நடக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.