புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையின் அருகேயுள்ள மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமதுரியாஸ் (19), எஸ்.பி. பட்டிணம் பகுதியைச் சேர்ந்த பாதுஷ அப்பாஸ் (19) ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினத்திலிருந்து மீமிசல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டுப்பாட்டையிழந்த இருசக்கர வாகனம் சாலையிலிருந்த மரத்தில் மோதியது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: லாரியில் சமையல் செய்தபோது, சிலிண்டர் வெடித்து விபத்து!