ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் இணைந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று கும்மியடித்து சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
இதுகுறித்து திருநங்கைகள் அமைப்பின் தலைவி அசினா நாயக் கூறுகையில், நான்கு நாட்களாக குழந்தை அந்த சிறிய குழிக்குள் என்ன பாடுபடுகிறதோ என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எங்களால் இந்தப் பிரார்த்தனைதான் செய்ய முடியும். தயவுசெய்து அரசாங்கம் அந்தக் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்று மனதார கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான்காவது நாளாக தொடரும் மீட்புப்பணி!