புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த ஐந்து மாதங்களாக வாகனங்களை இயக்காமல் உள்ளனர்.
இருப்பினும் சுற்றுலா வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து விடுபட ஸ்டாப் பேஜ் பணம் கட்டினால் அடுத்து சுற்றுலா வாகனங்களை இயக்கும் வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அதன் உரிமையாளர்கள் வரி கட்ட வேண்டாம் என்ற விதி உள்ளது.
இதையடுத்து நேற்று (ஆகஸ்ட் 3) சுற்றுலா வாகனங்களை அதன் உரிமையாளர்கள் ஊர்வலமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் தற்காலிகமாக நாங்கள் வாகனங்களை இயக்கவில்லை என்று ஸ்டாப் பேஜ் பணம் கட்டிச் சென்றனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு: தேவையின்றி வெளியில் வருபவர்களை கண்காணிக்க 200 இடங்களில் வாகன தணிக்கை!