ETV Bharat / state

திருமயம் மஞ்சுவிரட்டு: 500 காளைகள் பங்கேற்பு - இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில்

புதுக்கோட்டை: இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருமயத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

திருமயம் மஞ்சுவிரட்டு  புதுக்கோட்டை மஞ்சு விரட்டு  இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில்  thirumayam manju virattu
திருமயம் மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை
author img

By

Published : Mar 11, 2020, 10:35 AM IST

திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருமயம் தாமரை கண்மாய் திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் திருமயம், அரிமளம், அறந்தாங்கி, திருப்பத்தூர், சிவகங்கை, மேலூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கீழசீவல்பட்டி, பொன்னமராவதி, விராச்சிலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.

மஞ்சுவிரட்டுக்கென தனித்துவமாக அமைக்கப்பட்டிருந்த திடலில் முதலில் உள்ளூர் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெளியூர்களிலிருந்து வந்திருந்த காளைகளை உரிமையாளர்கள் ஒவ்வொன்றாக கண்மாய் பகுதியில் ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர்.

இந்த மஞ்சுவிரட்டில் ஆறு பேருக்கு லேசான ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்குத் திருமயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட பெரியகல்வயலைச் சேர்ந்த சிவாவிற்குச் சொந்தமான மாடு ஒன்று திருமயம் அருகே உள்ள ரயில் பாதையைக் கடக்கும்போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு இறந்தது.

இது குறித்து மாட்டின் உரிமையாளருக்கு தெரியப்படுத்திய பின்னர் சிவா தனது நண்பர்களுடன் உயிரிழந்த மாட்டின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தை பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் முன்னாள் வேளாண் அதிகாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.