ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்.. டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக ஆஜர்..! - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையை நாடிய 8 நபர்களும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து மீண்டும் 4ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்து 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

author img

By

Published : Jul 1, 2023, 10:53 PM IST

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்து 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: இறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 180 நாட்களுக்கும் மேலாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதுவரை சிபிசிஐடி இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 153 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பதும், அது மனித கழிவுதான் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சிபிசிஐடி காவல் துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் 11 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு பார்த்திபன் என்ற அதிகாரி தலைமையில், இவர்களிடம் டிஎன்ஏ சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, சிபிசிஐடி காவல் துறையினர் கூறிய வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 9 நபர்களிடமும், காவிரி நகர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் டிஎன்ஏ சோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட இருந்தது. இதில் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த காசி, ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா, கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முத்தையா ஆகியோருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

மீதமுள்ள எட்டு பேர் ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடிய சிபிசிஐடி காவல் துறையினர், புதிதாக மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரினர். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ முத்துக்காடு, மேல முத்துக்காடு, வேங்கைவயல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்த எட்டு பேரும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையை நாடினர். அங்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த எட்டு பேரும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 30) ஆஜராகினர். நீதிமன்றத்தில் ஆஜரான எட்டு பேரிடம் நேற்று (ஜூலை 01) விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, சிபிசிஐடி டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்படுவதற்காக அளித்த விளக்க கடிதத்தை அளித்தார்.

கடிதத்தை பெற்றுக் கொண்ட எட்டு நபர்களும் நீதிபதியிடம் கடிதம் ஆங்கிலத்தில் உள்ளது என்றும் இதை உடனடியாக எங்களுக்கு படிக்க தெரியாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட எட்டு நபர்களுக்கும் ஒருநாள் கால அவகாசம் கொடுத்து நாளை இதே நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜரான எட்டு பேரும் எழுத்துப்பூர்வமான விளக்கக் கடிதத்தை அளித்தனர். அதில், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள தங்களுக்கு சம்மதம் இல்லை எனவும் தங்களது கோரிக்கை குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தது யார் என கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும்.

அதை விட்டுவிட்டு தங்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும், வழக்கை இழுத்தடிப்பதற்காகவே இந்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும், இது போன்ற டிஎன்ஏ பரிசோதனை உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதை கேட்டுக்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட 8 பேரும் வரும் 4ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே தடுப்பணையில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.