ETV Bharat / state

'சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக உள்ளார்’ - அண்ணாமலை

'தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இதில் தான் தமிழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னேற்றியுள்ளார்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறையில் இருக்க வேண்டியவர் தமிழக சிறைத்துறை அமைச்சராக உள்ளார்

author img

By

Published : Aug 2, 2023, 8:56 PM IST

'சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக உள்ளார்’ - அண்ணாமலை

புதுக்கோட்டை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ம் தேதி முதல் “என் மண் என் மக்கள்” என்ற நோக்கில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 6வது நாளான இன்று நடைபயணமாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் இன்று (ஆகஸ்ட் 2) மக்களைச் சந்தித்தார்.

இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திருமயம் வந்த அண்ணாமலைக்கு திருமயம் கோட்டை அருகே பாஜகவினர் வெடிகள் வெடித்தும் மாலைகள் அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அங்கு குவிந்திருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மலர்த் தூவியும், ஆட்டம் பாட்டத்துடன் அண்ணாமலையை வரவேற்றனர். பின்னர், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் பிரிவு சாலையில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை திருமயம் கோட்டை, கடைவீதி, பாப்பாவயல், தகர கொட்டகை உள்ளிட்டப் பகுதிகள் வழியாக நடைபயணமாக வந்து மோடி அரசின் 9 ஆண்டுகள் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறியதோடு பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பெண்களிடம் அவர்களுக்கான பிரச்னைகளை குறித்து கேட்டு அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து திருமயம் எதிரே பொதுமக்கள் மத்தியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'உலக வரைபடத்தில் முக்கிய ஊராக திருமயம் திகழ்கிறது. திருமயம் கோட்டையில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த நடிகர் விஜயின் அம்மா!

ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுவதற்கு பிரதமர் மோடி தான் காரணம், இனி எந்த காலத்திலும் தடை ஏற்படாதவாறு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுள்ளோம். ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தவர்கள் திமுக - காங்கிரஸ் கட்சியினர். அதை உடைத்து நிரந்தர தீர்ப்பை பெற்று கொடுத்தவர், பிரதமர் மோடி.

தீரர் சத்திய மூர்த்தி வாழ்ந்த பெருமைக்குரிய ஊர் திருமயம், அப்படிப்பட்ட இந்த தொகுதியில் அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் ரகுபதியை சட்டத்துறை மற்றும் ஊழல் தடுப்பு சிறைத்துறை அமைச்சராக ஆக்கியுள்ளனர். சிறையில் இருக்க வேண்டியவர், தமிழக சிறைத்துறை அமைச்சராக உள்ளார். இது தான் திராவிட மாடல் அரசு.

இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது. 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகம் கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இதில் தான் தமிழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னேற்றியுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கிராமத்தில் சொல்வார்கள் 'பேய் போய் பூதம் வந்தது' என்று, அந்த கதையாக செந்தில் பாலாஜி பேய் என்றால், முத்துச்சாமி பூதமாக திகழ்கிறார். தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் குடும்பம் ஊழலில் திளைக்கிறது. இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர், முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர்.

மத்திய அரசு பட்டியலின சமூக மக்களுக்கு கொடுத்த 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கு கொடுத்துள்ளனர். பணம் இல்லை என்றால் ஏன் இந்த திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்ற வேண்டாம். தமிழக அரசு பெண்களுக்கு உரிமை தொகை கொடுக்கும் திட்டத்தில் நாடகம் நடத்துகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: முதல் பெண் யானை பராமரிப்பாளர் - பணி நியமன ஆணை வழங்கி கவுரவித்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.