புதுக்கோட்டை: கிள்ளனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களின் வெளிப்புறத்தில் உள்ள வெண்கல மணி, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிய ஆறு பேர் கொண்ட கும்பலை கடந்த 14ஆம் தேதி மாலை பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் சுற்றி வளைத்து சினிமா பாணியில் சேஸிங் செய்து அவர்களை பிடித்து தர்மா அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த 10 வயது சிறுமி கற்பகாம்பிகாவுக்கு காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமி உள்ளிட்ட கொள்ளை கும்பலை தாக்கியதாக வாட்ஸ்அப்பில் பரப்பிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஆறு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த சிறுமியை இளைஞர்கள் உள்ளிட்ட யாரும் தாக்கவில்லை. எந்த முகாந்திரமும் இல்லாமல் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், அதனால் அவர்களை உடனடியாக வெளியே விட வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாரா ஷ்ரத்தா? - வெளியான பகீர் தகவல்