ETV Bharat / state

ஆசிரியர் பற்றாக்குறை... ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்... திணறும் பள்ளிக்கல்வித்துறை!

புதுக்கோட்டை: ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் மற்றும் குழந்தைகள் பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

parents protest
author img

By

Published : Sep 6, 2019, 4:12 PM IST

வல்லம்பக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 95க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 95 குழந்தைகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாகத் தெரிகிறது. இதனால் கடந்த ஓராண்டு காலமாக ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவ, மாணவியர்கள் ஒழுங்காக படிக்க வில்லையென பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து துறை அதிகாரிகளிடம் சென்று முறையிடுகையில், விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையென்றும், இதுவரை பணியாற்றி வந்த தற்காலிக பணியாளர்களும் தற்போது வரவில்லையெனவும் அப்பகுதி பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க முயலுகின்ற, காலகட்டத்தில் தங்கள் பகுதி ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் மட்டும் 95க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தும் அதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாதது வேதனையளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்

எனவே 95 மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பிற்கு ஏற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Intro:Body:பள்ளி முன்பு பெற்றோர்கள் பள்ளிக் குழந்தைகள் காத்திருப்பு போராட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் மற்றும் குழந்தைகள் பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வல்லம்பக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 95 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 95 குழந்தைகளுக்கும் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்ற நிலையில் கடந்த ஒராண்டு காலமாக ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவ, மாணவியர்கள் ஒழுங்காக படிக்க வில்லையென பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து துறை அதிகாரிகளிடம் சென்று முறையிடுகையில், விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையென்றும், இதுவரை பணியாற்றி வந்த தற்க்காலிக பணியாளர்களும் தற்ப்போது வரவில்லையென அப்பகுதி பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார்ப்பள்ளியை நோக்கி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க முயலுகின்ற காலகட்டத்தில் தங்கள் பகுதி ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் மட்டும் 95 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் பயின்று வந்தும் அதற்க்கு போதிய ஆசிரியர்கள் இல்லாதது வேதனையளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே 95 மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பிற்க்கு ஏற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தினத்தன்று, ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.