புதுக்கோட்டை: பொன்னமராவதி பகுதி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பேருந்து வசதி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று(ஜூலை.25) பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பொன்னமராவதி இருந்து வாழை குறிச்சி வழியாக திருமயத்திற்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர், அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தனர். இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நாளை ஓபிஎஸ் - இபிஎஸ் பிரதமருடன் அவசர சந்திப்பு