ETV Bharat / state

இயற்கை விவசாயத்தில் களமிறங்கி அசத்தும் முதுநிலைப் பட்டதாரி பெண் - pudukkottai district news

புதுக்கோட்டை: பிள்ளைகளுக்கு செலவு செய்ய யோசிப்போமா? அதுமாதிரிதான் விவசாயமும் என்கிறார் முதுநிலைப் பட்டதாரி பெண். இவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

இயற்கை விவசாயத்தில் களமிறங்கி அசத்தும் முதுநிலைப் பட்டதாரி பெண்

author img

By

Published : Oct 20, 2020, 9:06 PM IST

Updated : Oct 22, 2020, 5:05 PM IST

தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றுக்குப் பின் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் ஒன்றுதான் விவசாயம்.

பெரிய படிப்புகள் எல்லாம் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள் எல்லாம் சொந்த நாடு திரும்பி விவசாயத்தில் களம் இறங்கி வருகின்றனர். அதிலும் சிலர் படித்துவிட்டு விவசாயம் செய்வதா? என வீட்டிலேயே பொழுதை கழித்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

இயற்கை விவசாயத்தில் களமிறங்கி அசத்தும் முதுநிலைப் பட்டதாரி பெண்

எவ்வளவுதான் படித்திருந்தாலும் மனிதனுக்கு உணவு தான் முக்கியம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முதுநிலை பட்டதாரி ஓவியா. இவரை கணவர் கைவிட்ட நிலையில் தனது 7 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

முதுநிலை பட்டம் படித்து விட்டு சரியான வேலை கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வந்துள்ளார். அப்போது தனது தந்தை இறப்பதற்கு முன் கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முயற்சி செய்தார்.

மூன்று மாதத்திற்கு முன்பு நண்பர்களிடம் கொஞ்சம் நிதி திரட்டி அந்த நிலத்தில் கடலை, மொச்சை, தட்டப்பயிறு, உளுந்து போன்றவற்றை பயிர் செய்தார். இயற்கை விவசாயத்தைப் பற்றி இணையதளத்திலும், அனுபவம் மிக்கவர்களிடமும் கற்றுத் தேறி மற்றவர்களுக்கு விவசாயத்தில் அறிவுரை கூறும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

மேலும் படித்துவிட்டு எதற்கு விவசாயம் செய்கிறாய்? என்ற அனைவரின் விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து காட்டி இருக்கிறார் ஓவியா.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "என் பிள்ளைகளுக்கு செலவு செய்வதை கணக்கு பார்க்க முடியுமா? அதுபோலதான் விவசாயமும். துணிந்து இந்த களத்தில் இறங்கி இருக்கிறேன். நிச்சயம் வென்றெடுப்பேன். விவசாயத்தோடு சேர்த்து ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு ஆகியவற்றை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.

அரசாங்கத்திடம் இதற்கென நிறைய திட்டங்கள் உள்ளன. ஆனால் மக்களுக்கு அது சரியாகத் தெரியவில்லை. அரசாங்கம் இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படியானால் நிச்சயம் இளைஞர்கள் அனைவரும் விவசாயத்தில் களம் இறங்குவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: உதவி செய்யுமா அரசு?

Last Updated : Oct 22, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.