புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகர உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் சிறப்பு மனு நீதி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நகர காவல் ஆய்வாளர் குருநாதன், மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா திருக்கோகரணம் காவல் ஆய்வாளர் கௌரி, உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணம் கொடுக்கல்-வாங்கல், பாதை பிரச்சினை, வீடு, கடைகள் காலிசெய்வது, குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட 50 மனுக்கள் பெறப்பட்டு தீவிர விசாரணை செய்து சமரச தீர்வு காணப்பட்டது.
சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களது பிரச்சினைகளைக் கூறினார்கள். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று காவல் துறையினர் உறுதி கூறி அனுப்பினர்.