ETV Bharat / state

வெட்டப்பட்ட மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய சமூக ஆர்வலர்கள் - மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இருந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மரம் நண்பர்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் வெட்டப்பட்ட மரத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வெட்டப்பட்ட மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய சமூக ஆர்வலர்கள்

author img

By

Published : Aug 15, 2021, 1:07 AM IST

புதுக்கோட்டை: மாவட்டத்தில் சமீபகாலமாக ஆங்காங்கே சிலர் நன்கு வளர்ந்துள்ள மரங்களை வெட்டி வருகின்றனர். இதனை சமூக ஆர்வலர்கள், மரம் நண்பர்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனை வாசலில் நன்கு வளர்ந்திருந்த மரத்தை மருத்துவ நிர்வாகம் வெட்டியுள்ளனர். இதனை புகைப்படம் எடுத்து நேற்று (ஆக. 13) இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

மரம் நண்பர்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் வெட்டிய மரத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி

அண்மையில் மறைந்த நடிகர் விவேக் மரம் நடப்படுவதன் அவசியத்தை எடுத்து கூறும் விதமாக தனது செயல்பாடுகளால் மக்கள், இளைஞர்களை ஊக்கப்படுத்தி மரக்கன்றுகளை நட்டும் செயல்படுத்தினார்.

சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மக்கள் அனைவரும் நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பாரத பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஆக. 14) மரம் நண்பர்கள் அமைப்பினர், இளைஞர்கள் இணைந்து அந்த மரத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி தங்களது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். இந்நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'விவசாயிகள் போராட்டத்தை வலுவானதாக மாற்ற திட்டம் - தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.