ETV Bharat / state

புதுக்கோட்டையில் கரோனாவிற்கு சித்தா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை - Pudukkottai coroan cases

புதுக்கோட்டை: கரோனாவிற்கு பாரம்பரிய சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை வசதிகொண்ட சித்தா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தயாராகிவருகிறது.

siddha
siddha
author img

By

Published : Jul 30, 2020, 10:24 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தினம்தோறும் 90 முதல் 100 நபர்கள் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் நேற்றைய (ஜூலை 29) நிலவரப்படி, 1,840க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நாளுக்கு நாள் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துவருவதால், நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள புதிய கட்டடத்தில் 100 படுக்கைகள் வசதிகொண்ட கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

சித்தா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை பணிகள் தீவிரம்

இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சித்தா முறையில் சிகிச்சை பெற விரும்பினால் இங்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த மருத்துவமனையில் நமது பாரம்பரிய வைத்தியம் முறையில், பல்வேறு மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்க உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அறையிலேயே அடைந்து கிடக்காமல் அவர்களை சுதந்திரமாக மருத்துவமனை வளாகத்திற்குள், வெளியில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. அவ்வாறு சிகிச்சை அளிக்கும்போது அவர்களுடைய மன அழுத்தம் குறைந்து, மன வலிமை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சித்த மருத்துவர்கள், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனர். இது தமிழ்நாட்டிலேயே எட்டாவது கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விரையில் தமிழ்நாடு முழுவதும் சித்தா கேர் சென்டர்கள் அமைக்கப்படும் -அமைச்சர் பாண்டியராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.