நாடு முழுவதும் இன்று (செப் 13) நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டையில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் தேர்வுக்கு எதிராக பாடைகட்டி ஊர்வலமாக கீழராஜ வீதியில் இருந்து அண்ணாசிலை நோக்கி சென்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் சாலையில் அமர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தியதாலும் போராட்டத்திற்கு வந்த மாணவர்கள் பலர் முகக் கவசம் அணியாததால் மாணவர்களை கலைந்து போகச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.