புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று (டிச.12)தஞ்சையில் இருந்து கந்தர்வகோட்டை தடம் எண் -60 அரசு பேருந்து நீண்ட நேரம் ஆகியும் வராததால் மாணவ - மாணவிகள் அவதியடைந்தனர்.
இதனையடுத்து பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை அலுவலகத்திற்கு நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினரிடம் பேருந்து வராததை குறித்து பள்ளி மாணவிகள் எடுத்து கூறினர்.
இது குறித்து தொலைபேசி மூலம் போக்குவரத்து துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பேசினார். பின்னர் பேருந்து தினசரி வரும் என்று மாணவிகளிடம் உறுதியளித்தார். அதன் பின்பு தனது சொந்த கார் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் காரில் பள்ளி மாணவிகளை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் பெற்றோர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!