ETV Bharat / state

புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர்
author img

By

Published : Oct 23, 2021, 7:00 AM IST

புதுக்கோட்டை : கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 18.10.2021 அன்று என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதால் மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது.

இந்நிலையில், அவர்களை மீட்டுத் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் (22), சேவியர் (38) ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்தனர். மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (28) என்பவர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டார்.

ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

இதையடுத்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அவரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் .

இதையும் படிங்க: உலகம் போற்றும் செம்மொழியின் அடுத்தகட்ட நகர்வு - புதிய விசைப்பலகை, ஒருங்குறி மாற்றி அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.