ETV Bharat / state

உடலை கொண்டு செல்ல சாலை எங்கே? உறவினர்கள் சாலை மறியல்! - உடலை கொண்டு செல்ல சாலை எங்கே

புதுக்கோட்டை: விக்னேஸ்வரபுரத்தில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல பாதை பிரச்னையை தீர்த்து உடலை அடக்கம் செய்ய அலுவலர்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

road picketing protest in aranthagi, take steps to clear way for cemetery, உடலை கொண்டு செல்ல சாலை எங்கே, அறந்தாங்கியில் உறவினர்கள் சாலை மறியல்
அறந்தாங்கியில் உறவினர்கள் சாலை மறியல்
author img

By

Published : Jan 24, 2020, 8:39 PM IST

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் சாலையில் அரசு பாலிடெக்னிக் அருகிலுள்ள விக்னேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மாற்றுத்திறனாளியான காளிமுத்து(53). இச்சூழலில் இவர் நேற்றிரவு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.

இவர் வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இருச்சக்கர வாகனத்தில், அதற்குரிய உபகரணங்கள் வைத்து விளம்பரம் செய்து வரும் தொழில் செய்து வந்தார். இவரின் உடலை விக்னேஷ்வரபுரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில், மயானத்தின் அருகில் ஒருவருக்கு சொந்தமான பட்டா இடமுள்ளது; அந்த இடத்தை ஒட்டியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த இடத்திற்குரிய நபர் என் இடத்தின் அருகே செல்லக்கூடாது அடக்கம் செய்ய கூடாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை திடீர் ஆய்வு - பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!

இதில் கோபமடைந்த இறந்தவரின் உறவினர்கள் அறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் மறியல் செய்தனர். இது குறித்து தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி பட்டா இடம் அருகில் உடலை அடக்கம் ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார்.

அறந்தாங்கியில் உறவினர்கள் சாலை மறியல்

இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:Body:அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே விக்னேஸ்வரபுரத்தில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் பாதை பிரச்சனையில் பாதை பிரச்னையை தீர்த்து உடலை அடக்கம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று இறந்தவரின் உறவினர்கள் பஸ் மறியல் செய்தனர்.

அறந்தாங்கி அருகே அறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் அரசு பாலிடெக்னிக் அருகில் உள்ள விக்னேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் காளிமுத்து(53) இவர் உடல் ஊனமுற்றவர் மாற்றுத்திறனாளி இந்நிலையில் இவர் நேற்றிரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டுஇறந்து விட்டார்.இவர் வணிக மற்றும் வர்த்த நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனத்தில் அதற்குரிய உபகரணங்கள் வைத்து விளம்பரம் செய்து வரும் தொழில் செய்து வந்தார் இந்நிலையில் இறந்தவரின் உடலை விக்னேஷ்வரபுரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுசெய்த நிலையில் மயானத்தின் அருகில் ஒருவருக்கு சொந்தமான பட்டா இடம் உள்ளது அந்த இடத்தை ஒட்டியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த இடத்திற்குரிய நபர் என் இடத்தின் அருகே செல்லக்கூடாது அடக்கம் செய்ய கூடாது என்றுமறுப்பு தெரிவிக்கவே பாதிக்கப்பட்ட இறந்தவரின் உறவினர்கள் அறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் மறியல் செய்தனர் இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி டிஎஸ்பி பாலமுருகன் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து சமரசம் செய்து ஏற்கனவே தீர்மாணிக்கப்பட்டபடி பட்டா இடம் அருகில் உடலை அடக்கம் ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியநிலையில மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர் இந்த மறியல் காரணமாக அறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.