ETV Bharat / state

'மௌன புரட்சியாளர் டிடிவி தினகரன்' : நடிகர் ரஞ்சித்! - Actor ranjith

புதுக்கோட்டை: டிடிவி தினகரனின் அரசியலை மக்கள் விரும்புவதால், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று அவர்தான் ஆட்சியை பிடிக்கபோகிறார் என்று நடிகரும் அமமுக உறுப்பினருமான ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித்
author img

By

Published : Apr 9, 2019, 10:21 PM IST

புதுக்கோட்டையில் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையின்போது, எதிர்க்கட்சிகளின் செயல்களை முக பாவனைகளுடன் நடித்துக்காட்டியபடி பரப்புரை மேற்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த பரப்புரையின்போது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் பேசியதாவது, "நான் பாமகவில் இருந்தபோது அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன் ஆனால் தற்போது தினகரன் அணியிடம் சேர்ந்து அவரின் அடிமட்ட தொண்டனாக மாறி விட்டேன். நடிகர்கள் எல்லாம் சும்மா ஒரு விளம்பரத்துக்குதான் அரசியலுக்கு வருவாங்க ஆனால் நான் மக்களின் உரிமைகளை மீட்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன் அதுவும் டிடிவி தினகரனின் கட்சிக்கு வந்திருக்கிறேன் என்பது மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.

யாருக்கும் அஞ்சாமல், அடிபணியாமல், லஞ்சம் வாங்காமல் மக்களுக்காக சேவை செய்வதற்காகவே டிடிவி தினகரனின் கட்சியில் இணைந்துள்ளேன். என்னதான் அனைவரும் கருத்துக்கணிப்பில் திமுகவை உயர்த்தி காட்டினாலும் இறுதியில் வெல்வது அம்மாவின் ஆட்சிதான். ஆர்.கே. நகர் தேர்தலில் எப்படி எதிர்பாராத வெற்றியை நாங்கள் அடைந்தோமோ அதேபோல் இம்முறையும் வெற்றி அடைவோம், ஏனென்றால் அம்மாவின் ஆளுமை, தமிழின் தேர்வு என்றால் அது தினகரன்தான்.

மௌன புரட்சியாளராக இருக்கும் டிடிவி தினகரனின் அரசியலை மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சி மாற்றம் தேவைப்படுவதாக மக்கள் உணரும் இந்த நேரத்தில், எதற்கும் அஞ்சாத வீரரான தினகரன்தான் வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு நிச்சயம் வருவார்" என்று கூறினார்.

நடிகர் ரஞ்சித் பிரத்யேக பேட்டி

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.