குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியதாவது:
கோடை காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான குடிநீர் வழங்குவதற்காக புதிதாக மாற்று ஆழ் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கியத்துவமளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.